Thursday, May 15, 2025

கராச்சி பெயரில் பேக்கரி…அடித்து நொறுக்கிய பாஜக ஆதரவாளர்கள்

இந்தியா – பாகிஸ்தான் மோதல் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள கராச்சி பேக்கரியை பாஜக ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகழ்பெற்ற கராச்சி பேக்கரி 1953 ஆம் ஆண்டு முதல் ஐதராபாத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்
பேக்கரியின் பெயரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பேக்கரியின் அறிவிப்புப் பலகைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

காவி கொடிகளை ஏந்தி வந்த அந்த கும்பல், “பாகிஸ்தான் முர்தாபாத்” மற்றும் “பாரத் மாதா கீ ஜெய்” போன்ற கோஷங்களை எழுப்பி அங்கு வன்முறையில் ஈடுபட்டது.

Latest news