சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிக்கு நடந்த வன்கொடுமைக்கு நீதி கேட்டு பாஜக மகளிர் அணியினர் மதுரையில் இருந்து சென்னைக்கு பேரணியாக செல்ல முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாஜகவினரை மதுரையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.