பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜெ.பி.நட்டா, தில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
டெல்லியின் முதல் பாஜக தலைவரான இவர், இரண்டு முறை அப்பதவியை வகித்துள்ளார். இரண்டு முறை டெல்லி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
கடந்த 2008 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக விஜய் மல்ஹோத்ரா களமிறக்கப்பட்டார். அரசியல் மட்டுமின்றி விளையாட்டுத் துறை நிர்வாகத்திலும் திறம்பட செயல்பட்டுள்ளார்.