பாஜக ஒரு அமீபா போன்றது, அது சமூகத்தில் நுழைந்து அமைதியை சீர்குலைக்கிறது என உத்தவ் தாக்கரே காட்டமாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பா.ஜ.க. ஒரு அமீபாவை போன்றது. அமீபா அதன் விருப்பத்தின்படி உருவத்தை மாற்றி பரவுகிறது. அதன் விருப்பப்படி கூட்டணியை உருவாக்குகிறது.
அதன் வேலை முடிந்ததும் அது மற்றொரு கட்சிக்கு மாறுகிறது. அமீபா உடலுக்குள் நுழையும்போது வயிற்று வலியை ஏற்படுத்தும், அதேபோல பா.ஜ.க. சமூகத்தில் நுழையும்போது அமைதியை சீர்குலைக்கிறது என்று தெரிவித்தார்.