கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அமைச்சர் பொன்முடி சென்றுள்ளார். அப்போது அவர் மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கில் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.