சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பாலாஜி நகர் பகுதியை ஜெயராம். பாஜக நிர்வாகியான இவர், முதுகலை பட்டம் படித்த இளைஞர்களிடம் மத்திய அரசு துறைகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீடு மூலம் வேலைவாங்கி தருவதாக கூறி, 33 லட்சம் ரூபாயை பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஜெயராம் தனது குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து பம்மல் சங்கர் நகர் குற்றப்பிரிவில் புகாரளிக்கப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.