Tuesday, August 12, 2025
HTML tutorial

“ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக விரும்பவில்லை” – ராகுல் காந்தி

டெல்லியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ”ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் விரைவில் உருவாகும். அவர்கள்தான் இந்த நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறார்கள். ஒரு அந்நிய நாட்டு மொழியில் நமது வரலாறு, கலாசாரம், மதத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. முழுமையற்ற அந்நிய நாட்டு மொழிகளால் ஒரு முழுமையான இந்தியாவை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.” எனத் தெரிவித்தார்.

அமித் ஷாவின் கருத்தை விமர்சித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக் கொள்வதை பாஜக – ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனென்றால், நீங்கள் கேள்வி கேட்பதையும் முன்னேறுவதையும் போட்டியிடுவதையும் அவர்கள் விரும்பவில்லை.

இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலத்தை கற்பிக்க வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News