Friday, March 21, 2025

தமிழகத்தில் பெண்களை காப்பாற்ற பாஜக கூட்டணி ஆட்சி வரவேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

தமிழக பாஜக தென்சென்னை மாவட்டம் சார்பில் மகளிர் தின விழா தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது : “புதிய கல்விக் கொள்கை என்றாலே, இந்தி இந்தி என்று சொல்வதை நான் மறுக்கிறேன். திணிக்காத இந்தியை நீங்கள் திணித்து கொண்டிருக்கிறீர்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

திமுகவினர் கோயிலுக்குச் செல்ல மாட்டோம் என்பார்கள். ஆனால், ஒளிந்து கொண்டு கோயிலுக்கு செல்வார்கள். அதேபோல், அவர்கள் இந்தியையும் ஒளிந்துகொண்டு தான் படிக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு மகளிர் தின விழாவை, பாஜக கூட்டணி ஆட்சியில், பாஜக பெண் அமைச்சர்கள் தலைமையில் கொண்டாடுவோம். தமிழகத்தில் பெண்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், பாஜக கூட்டணி ஆட்சி வர வேண்டும்” என அவர் பேசினார்.

Latest news