Friday, December 5, 2025

கிரிப்டோ சந்தையை காலி செய்த டிரம்ப்!! பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு பெரிய நஷ்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்ததை அடுத்து, கிரிப்டோ சந்தை வீழ்ச்சியடைந்தது. பிட்காயின், ஈதீரியம், சொலானா, பைனான்ஸ் போன்ற முக்கிய கிரிப்டோ நாணயங்கள் ஒரே நேரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Bloomberg வெளியிட்ட தகவலின் படி, 24 மணி நேரத்துக்குள் 1.6 மில்லியன் (16 லட்சம்) முதலீட்டாளர்கள் சுமார் $19 பில்லியனை இழந்துள்ளனர்.

சீன முதலீட்டாளர்கள் கிரிப்டோ மார்க்கெட்டில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள். டிரம்பின் புதிய வரி அறிவிப்பு அவர்களில் நம்பிக்கையை குறைத்துள்ளது. இதனால் மார்க்கெட்டில் விற்பனை அழுத்தம் உருவாகியுள்ளது என Ya Wealth நிறுவனத்தின் இயக்குனர் அனுஜ் குப்தா கூறியுள்ளார்.

வாசகர்களுக்கான எச்சரிக்கை

கிரிப்டோ மார்க்கெட்டில் முதலீடு செய்யும் முன்னர், சந்தை நிலவரங்களை ஆழமாக கவனியுங்கள். திடீர் அறிவிப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தக போர்களால் ஏற்படும் தாக்கங்களை கணிக்க இயலாத நிலையில், சிக்கனமான முதலீடுகளை செய்ய நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது சிறந்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News