Tuesday, January 27, 2026

நல்ல வரவேற்பை பெற்ற ‘பைசன்’ படம்., உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு?

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் பைசன். இப்படத்தில் பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது சிலர் கலவையான விமர்சனங்களை வைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.5 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில் இப்படம் உலகளவில் ரூ. 45.5 கோடி வசூல் செய்துள்ளது.

Related News

Latest News