மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் பைசன். இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை என்று சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தின் முதல் சிங்கிளான “தீக்கொளுத்தி” பாடலும், 2-வது பாடலான “றெக்க றெக்க” பாடலும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் 3-வது பாடலான சீனிக்கல்லு, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முதல் 2 பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 3-வது பாடல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.மேலும், இன்று துருவ் விக்ரம் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ‘பைசன் காளமாடன்’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக இயக்குனர் மாறி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது அன்பின் துருவ்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிரமிக்க வைக்கும் உன் உழைப்பின் மூலம் உன் கனவுகள் அத்தனையும் சாத்தியமாகட்டும். நிச்சயம் வெல்வாய் நீ. வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
