சைக்கிளுக்குப் பிறந்த நாள்

279
Advertisement

என்னது சைக்கிளுக்குப் பிறந்த நாளா…?
ரொம்ப ஆச்சரியமா இருக்கே… ன்னுதானே
கேட்குறீங்க…

ஜுன் 3ஆம் தேதிதான் சைக்கிள் பிறந்த நாளாம்..

வாவ் வாட் எ கிரேட்மா…சைக்கிள் பிறந்த நாள
எப்படிப் பா கண்டுபிடிச்சீங்கன்னு கேட்குறீங்க…

சைக்கிள் தினம்னு ஐக்கிய நாடுகள் சபை 2018 ல சொல்லிருச்சு-…

இதுக்காக ஒரு தீர்மானம் கொண்டு வந்துச்சு-…அது என்னன்னா…

”இரு நூறு வருஷத்துக்கும் மேலா பயன்பாட்ல இருக்கற
சைக்கிளோட தனிச்சிறப்பு, நீண்டகால பயன்பாடு, பல்திறன்,
சுற்றுச்சூழலுக்கேத்த எளிமையான, மலிவான, நம்பகமான,
சுத்தமான போக்குவரத்துக் கருவி”ன்னு புகழ்மாலை சூடியிருக்கு.

சைக்கிளுக்குப் பிறந்த நாள் கொண்டாடணும்னு
முயற்சி செஞ்சவர் அமெரிக்கப் பேராசிரியர். அவர் பேரச்
சொல்றேன்… யங் மங் சங்னு ஈசியா சொல்ல முடியாது-…

லெசுச் செக் சிபிலிசுக்கி…..

மறுபடியும் சொல்றேன்…நல்லா கேட்டுக்குங்க..

லெசுக் செக் சிபிலிசுக்கி…

இந்தப் பேராசிரியர் சமூகவியல் படிக்கும் தன்னோட
ஸ்டூடண்ட்ஸோட சேர்ந்து சைக்கிளுக்குப் பிறந்த நாள்
கொண்டாடணும்னு உலகம் முழுக்க பிரசாரம் செஞ்சார்..
இதுக்கு 56 நாடுகள் ஆதரவா இருந்துச்சு/

இவங்க என்ன சொல்லி பிரசாரம் செஞ்சாங்க தெரியுமா…?

சைக்கிள் மனுஷ இனத்துக்குச் சொந்தமானது. மனுஷ
இனத்துக்கு சேவையாற்றுற ஒரே சாதனம் சைக்கிள்னு
சொல்லி நாடு நாடா போய் பிரசாரம் செஞ்சாங்க…

அப்புறமென்ன…

பிரசாரம் ஜெயிச்சுயிடுச்சு.

2018 ஏப்ரல் மாசத்துல ஐநா சபை ஜுன் 3 ஆம்
தேதிய உலக சைக்கிள் தினம்னு அறிவிச்சிடுச்சி…

அதனால நாம இனிமே இந்த நாள சைக்கிள்
பிறந்த நாளா கொண்டாடுவோம்…