பறவை காய்ச்சல் எதிரொலியால் ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் இருந்து கோழிகள் மற்றும் முட்டைகள் வாங்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த நோய் அடுத்தடுத்த மாநிலங்களிலும் பரவி வருகிறது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த மாநிலங்களில் இருந்து கோழிகள் மற்றும் முட்டைகள் வாங்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இதனால் பறவை காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்க முடியும் அம்மாநில சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.