சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில் பாஜகவின் பூஜா விதானியின் மேயர் பதவியேற்பு விழாவில் ‘நாட்டின் இறையான்மையைக் காப்பேன்’ என்பதற்குப் பதிலாக ‘வகுப்புவாதத்தைக் காப்பேன்’ என படித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கவனித்த மாவட்ட ஆட்சியர் உடனே சுட்டிக்காட்டிய நிலையில் பூஜா விதானி மீண்டும் சரியாக வாசித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.