உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்தார்.
பைக்கில் சென்ற நபர் ஒருவர் ரயில்வே கிராசிங் மூடப்பட்டிருந்தபோது தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது பைக்கீழே சரிந்து விழுந்துள்ளது. பைக்கை எடுக்க முயன்றபோது வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
