துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய துணை குடியரசு தலைவர் தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது.
இதில் பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்துளளது.