மகனின் உடலை எடுத்துச்செல்ல லஞ்சம் கொடுக்க முடியாததால் பிச்சை எடுத்த பெற்றோர்

412

பீகார் மாநிலம், சமஸ்டிபூரை சேர்ந்த மகேஷ் தாக்கூர் என்பவது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காணாமல் போன அவரது மகனின் உடலில் சதார் அரசு மருத்துவமனையில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, உடலை வாங்க தனது மனைவியுடன் மகேஷ் தாக்கூர் சென்றார்.

ஆனால், அங்கிருந்தத ஊழியர்கள் மகனின் உடலை தர வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என மகேஷ் தாக்கூர்  கேட்டதாக சொல்லப்படுகிறது.

50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முடியாதததால், வேதனை அடைந்த அந்த வயதான தம்பதியினர் லஞ்சம் கொடுக்க தெருத் தெருவாக பிச்சை எடுத்தனர்.

இதற்கிடையே,இந்த சம்பவம் குறித்து  விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.