திருமணம் முடிந்த கையோடு, கணவனை தீர்த்துக் கட்டும் மனைவிகள் குறித்த செய்திகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. அந்தவகையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பீஹார் மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் பிரியான்ஷூ. இவருக்கும் Kunja Devi என்னும் 30 வயது பெண்ணுக்கும், கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து வெறும் 45 நாட்களில் புது மாப்பிள்ளை பிரியான்ஷூ கொலை செய்யப்பட்டார். கடந்த ஜூன் 25ம் தேதி பிரியான்ஷூ தங்கை வீட்டுக்கு சென்று, இரவில் நவிநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்து பைக்கில் யாரையாவது அனுப்பி தன்னை கூட்டி செல்லும்படி கூறியுள்ளார்.
அவர் வீடு திரும்பியபோது பைக்கில் வந்த இரண்டு பேர் பிரியான்ஷூவை சுட்டு கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து விசாரித்த போலீசாருக்கு மனைவி Kunja Devi மீது சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகத்திற்கு வலு சேர்ப்பது போல Kunja Devi தப்பித்து செல்ல முயற்சித்து, போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
Kunja Deviயும், திருமணமான அவரின் 55 வயது மாமா ஜீவன் சிங்கும், 15 வருடங்களுக்கு மேலாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் அவரின் வீட்டில் உள்ளவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அவரை வற்புறுத்தி பிரியான்ஷுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆகியும் Kunja Deviயால் ஜீவன் சிங்கை மறக்க முடியவில்லை. இதனால் ஜீவனுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கூலிப்படை வைத்து பிரியான்ஷூவை கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் தேவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜீவன் சிங்கைத் தொடர்ந்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.