பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 243 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் பீகார் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நவம்பர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11ம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.