Tuesday, March 11, 2025

நகைக்கடையில் துப்பாக்கி முனையில் நகை கொள்ளை – 2 பேர் கைது

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா நகரில் பிரபல நகைக்கடை ஒன்று செயல்படுகிறது. நேற்று காலை கடைக்குள் வந்த 6 மர்மநபர்கள் துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து நகைக்கடையில் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

கொள்ளையர்கள் 6 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து நகைகள், இருசக்கர வாகனங்கள், 10 தோட்டாக்கள், 2 துப்பாக்கிககளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Latest news