Wednesday, August 13, 2025
HTML tutorial

இரண்டாம் திருமணம் செய்பவர்களுக்கு ஆப்பு வைத்த மாநில அரசு 

இந்த காலட்டத்தில் இரண்டாம் திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய  பிரச்சனையாகவே பார்க்கப்படுவது இல்லை.மற்றொரு புறம் கள்ளக்காதல் வேற…சரி விசியத்திற்கு வருவோம்.

பலபேரின் இந்த இரண்டாம் திருமண முடிவால் அவரிகளின் முதல் துணை பெரிதும்   பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் தான் இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறது.இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பீகார் மாநில அரசு ஒரு புதிய சட்டத்தை  கொண்டுவந்துள்ளது.இருப்பினும் இந்த சட்டம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.அதில்,

முதல் விதி, பீகார் அரசு ஊழியர்கள் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள அவர்களின் முன்னாள் கணவரோ / மனைவியிடமிருந்து  அனுமதி பெற வேண்டும்

இரண்டாவது, இரண்டாம்  திருமணம் செய்து கொள்ள விரும்பும் பீகார் அரசு ஊழியர்கள்,  முதலில் அந்தந்த துறைக்குத் தெரிவித்து தேவையான அனுமதியைப் பெறவேண்டும்.

அடுத்ததாக  , எந்த ஒரு ஆண் அல்லது பெண் ஊழியர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடுகிறார்களோ, முதலில் கணவர் / மனைவியிடமிருந்து சட்டப்பூர்வ இருவரும் பிரிந்துவிட்டோம் என்ற சான்றை சம்பந்தப்பட்ட துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

முதல் மனைவி/கணவனின்  ஆட்சேபனை இருந்தால், பணியாளரின் இரண்டாவது மனைவி/கணவன் அரசு வசதிகளைப் பெறுவதற்கு உரிமையில்லை.

அரசு ஊழியர், சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெறாமல், இரண்டாவது திருமணம் செய்து, பணியின் போது இறந்தால், அவரது இரண்டாவது மனைவி/கணவன் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைக்காது. முதல் மனைவியின் குழந்தைகளுக்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்கும்.

பொது நிர்வாகம் அனைத்து பிரிவு ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டுகள், டிஜிபி, டிஜிபி ஹோம் கார்டு, டிஜிபி சிறை மற்றும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அதிகாரிக்கும் அந்தந்த அதிகார வரம்புகளில் இந்த உத்தரவுகளை  அமல்படுத்துவதற்கான அறிவிப்பை அனுப்பியுள்ளது அம்மாநில அரசு.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News