உங்களுக்கு கருப்பு வைரம் வேண்டுமா?

454
Advertisement

உலகின் மிக பெரிய வைரமான ‘THE ENGIMA’எனப்படும் 555 கேரட் கருப்பு வைரம் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இவற்றை நீங்கள் CRYPTOCURRENCY என்னும் ஆன்லைன் பணத்தின் மூலம் மட்டுமே வாங்க முடியும் என வைரத்தை ஏலமிடும் நிறுவனமான SOTHEBY’S இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.

இந்த புதுமையான கட்டண முறை டிஜிட்டல் யுகத்தில் இயங்கும் இன்றைய இளைய தலைமுறையை ஈர்க்கும் எனவும், புது வகையான வாடிக்கையாளர்களை சென்றடைந்து எங்களது புதிய வளர்ச்சிக்கும் இது உதவும் எனவும் கூறியுள்ளது.

மேலும் இந்த வைரம் 2006ம் ஆண்டு உலக கின்னஸ் புத்தகத்தில் மிக பெரிய வைரமாக இடம் பிடித்துள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரத்தை பற்றிய மேலும் ஒரு ஸ்வாரஸ்யமான தகவலாக இந்த வைரக்கல்லில் பூமியில் இல்லாத ஆற்றல்கள் உள்ளது எனவும் இந்த வைரக்கல் விண்வெளியில் இருந்து வந்து இருக்க கூடும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிப்ரவரி 3ம் தேதிக்கு online ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் CRYPTOCURRENCY மூலம் இதே நிறுவனத்தால் நிகழ்த்தப்பட்ட ஏலத்தில் 101 காரட் வைரத்தை 12.8 மில்லியன் அமெரிக்க DOLLAR-கு அடையாளம் தெரியாத ஒரு நபர் வாங்கி சென்றுள்ளார்.

இந்த வைரம் 6.8 மில்லியன் அமெரிக்க DOLLAR-கு ஏலம் போகலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது இந்திய ருபாய் மதிப்பில் நாற்பத்தி நாலு கோடியே 76 லட்ச ருபாய்.