Monday, December 29, 2025

ஜீ.வி பிரகாஷுடன் இணைந்த பிக்பாஸ் ஜனனி ….

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த முறை இலங்கையில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர் தான் ஜனனி.

இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் வாய்ப்பு கிடைத்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, மீண்டும் இலங்கைக்கு செல்ல முடியாத அளவுக்கு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதனால் மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஜனனி தனது புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், ஜீ.வி பிரகாஷின் இசையில் ஓர் ஆல்பம் பாடல் பண்ணியிருக்கிறார்.

இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் தற்போது வைரலாகி வருவதைக் காணலாம்.

Related News

Latest News