Wednesday, April 2, 2025

EPFO-வில் வரப்போகும் அதிரடி மாற்றம் ! 5 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம்! 

மத்திய அரசின் EPFO வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. தற்போது வரையும் PF பணத்தில்  முன்பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது, ஆனால் இப்போது அந்த வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறது . இந்த முன்மொழிவுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தவ்ரா ஒப்புதல் அளித்துள்ளார், மேலும் இந்த முடிவு மார்ச் 28 அன்று ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த மாற்றம் விரைவில் அங்கீகாரம் பெற்று செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு EPFO ஆட்டோ க்ளைம் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது, அதன்படி,  உறுப்பினர்கள் ரூ.50,000 வரை PF பணத்தை எடுத்தது வந்தனர். பின்னர், அந்த வரம்பை 2024 இல் ரூ.1 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியது. ஆனால் தற்போது, அந்த வரம்பு ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட  இருக்கின்றது. 

இந்த மாற்றம் EPFO உறுப்பினர்களுக்கு பல நன்மைகளை வழங்கும். தற்போது PF பணத்தைப் பெறுவதற்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக, PF பணத்தை மருத்துவம், கல்வி, திருமணம், மற்றும் வீட்டு வாங்குதல் போன்ற காரணங்களுக்காக எளிதாக முன்பணம் பெற முடியும். இதன் மூலம், EPFO உறுப்பினர்களுக்கு மிக முக்கியமான நிதி உதவி கிடைக்கும்.

மேலும், கோரிக்கை நிராகரிப்பு விகிதம் 30% ஆகக் குறைந்துள்ளது,  EPFO இல் ஆட்டோ க்ளைம் செயல்பாட்டின் மூலம் கோரிக்கைகள் தானாகவே செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், PF பணம் பெறுவதற்கான நேரம் 10 நாட்களில் இருந்து 3-4 நாட்களுக்குள் குறைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாற்றங்கள் விரைவில் EPFO உறுப்பினர்களுக்கு விரைவான சேவையை வழங்கும் மற்றும் கடினமான காலங்களில் நிதி உதவி பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தும்.

Latest news