Tuesday, April 22, 2025

விஜய் தேவரகொண்டா, ராணா உட்பட சினிமா நட்சத்திரங்கள் மீது வழக்கு பதிவு

சட்டவிரோத பந்தய ஆப்ஸ்களின் விளம்பரம் தொடர்பாக ஏற்கனவே பல யூடியூபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா, ராணா உட்பட சுமார் 25 தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பந்தய ஆப்ஸ் விளம்பர விவகாரத்தில் சுமார் 25 தெலுங்கு சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் மீது ஹைதராபாத்தில் உள்ள மியாப்பூர் போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் விஜய் தேவரகொண்டா, தகபட்டி ராணா, மஞ்சு லட்சுமி, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news