கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் தோசை சுடும் ரோபோவை வடிவமைத்துள்ளார்.
இதுபற்றி அந்த என்ஜினீயர் ரெடிட் என்ற இணையதள பக்கத்தில் தோசை சுடும் ரோபோவை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- நான் கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் தனிப்பட்ட முறையில் ஒரு ரோபோவை வடிவமைத்துள்ளேன். இந்த ரோபோ தானாகவே அடுப்பில் தோசை கல் வைத்தால் போதும் தானாகவே மாவை ஊற்றி தோசையை சுட்டெடுக்கும்.
எனது குடும்ப உறுப்பினர்கள் தோசை சுட சிரமப்படுவதை பார்த்து நான் இந்த தோசை சுடும் ரோபோவை வடிவமைத்தேன். இந்த ரோபோவுக்கு திண்டி என பெயர் வைத்துள்ளேன். (திண்டி என்றால் தமிழில் சிற்றுண்டி என்று பொருள்). இதுதொடர்பாக உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். இது வணிக பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.