Friday, December 26, 2025

லீவு தராததால் ஆத்திரம் : சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய நபர்

மேற்கு வங்கத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் தனக்கு விடுமுறை கிடைக்காததால் ஆத்திரத்தில் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமித் குமார் என்ற அந்த நபர் கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனக்கு விடுமுறை வேண்டும் என அமித் குமார் கேட்டுள்ளார். அதற்கு அந்த நிறுவனம் விடுமுறை தராததால் தனது சக ஊழியர்களை கத்தியால் குத்திவிட்டு, அதை கையில் ஏந்தியபடி ஊருக்குள் சுற்றித் திரிந்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அமித் குமாரை கைது செய்தனர். அவருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். கத்தியால் குத்தப்பட்ட 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகின்றன.

Related News

Latest News