மெக்சிகோவில் மாடல் அழகி ஒருவர் டிக்டாக் நேரலையின் போது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் வலேரியா மார்க்வெஸ் (23) என்ற மாடல் அழகி டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பாலோவர்ஸ்களுடன், சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் டிக்டாக் நேரலையில் அவர் வந்த போது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளார். இது அப்படியே நேரலையில் ஒளிபரப்பானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.