இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த 2025ம் ஆண்டு, பணமழை பொழியும் வருடமாக மாறியுள்ளது. பாகிஸ்தான் நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி அதிரடியாக ஆடி கோப்பையை வென்றது. எதிர்கொண்ட எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல், கேப்டன் ரோஹித் சர்மா வெற்றிக் கோப்பையை கையில் ஏந்தினார்.
இதில் இந்தியாவிற்கு பரிசுத்தொகையாக 19 கோடியே 50 லட்சம் ரூபாய் கிடைத்தது. இது மட்டுமின்றி ஒவ்வொரு போட்டிக்கும் நல்லதொரு தொகை, வீரர்களுக்கு ஊதியமாக அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, BCCI 58 கோடி ரூபாயை பரிசுத்தொகையாக அறிவித்து இருக்கிறது.
இந்த பரிசுத்தொகையானது வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்படும். ஆக மொத்தம் இந்த ஒரே தொடரின் மூலம், இந்திய அணி சுமார் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்து விட்டது.
அடுத்ததாக IPL போட்டிகள் 2 மாதகாலம் நடைபெற உள்ளன. உலகின் பணக்கார கிரிக்கெட் தொடர் என்பதால், இதற்கு BCCI பரிசுத்தொகையை கோடிக்கணக்கில் ஒதுக்கியுள்ளது. எனவே இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு, மற்றுமொரு பொன்னான ஆண்டாக இந்த 2025 அமைந்துள்ளது.