கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு 2வது டெஸ்டில் பழிதீர்த்துக் கொண்டுள்ளது. இதனால் டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் இருக்கிறது.
எனவே புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும், 3வது டெஸ்டில் எந்த அணி வெற்றி பெறும்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். இந்தநிலையில் கேப்டன் கில் வணிக ஒப்பந்தத்தை மீறி நடந்து கொண்டதால், BCCI அவர்மீது கொலைவெறியில் இருக்கிறதாம்.
BCCI தற்போது Adidas நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக BCCI காண்ட்ராக்டில் கையெழுத்து போடும்போது, Adidas தவிர்த்து வேறு எந்த நிறுவனத்தின் உடையையும் போட்டிகளின் போது பயன்படுத்தக் கூடாது, என்னும் வாசகம் இடம் பெற்றிருக்கும்.
இதற்கு ஒப்புக்கொண்ட கையெழுத்து போட்ட கில், அதைமீறி Nike நிறுவனத்தின் டீஷர்ட்டை 2வது டெஸ்டின் போது அணிந்துள்ளார். 2வது டெஸ்டின் 4வது நாளில் போட்டியை டிக்ளேர் செய்வதாக கூறி, ஆடுகளத்தில் இருந்த வீரர்களை கில் உள்ளே அழைத்தார்.
அப்போது அவர் அணிந்திருந்த Nike டீஷர்ட் நன்றாக தெரிந்தது. வீரர்களுக்கான உடைகள் தவிர்த்து ஒவ்வொரு போட்டிக்கும், 75 லட்ச ரூபாயை Adidas விளம்பர கட்டணமாக BCCIக்கு அளிக்கிறது. அப்படி இருந்தும் இந்த விதிமீறலை கில் செய்துள்ளார். இதனால் கில் மீது BCCI மிகுந்த அதிருப்தியில் இருக்கிறதாம்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ” Nike மேல கேப்டனுக்கு செம காதல் தான் போல. ஒரு ரூபா செலவில்லாம Nike நிறுவனத்துக்கு நல்ல விளம்பரம். இதுக்கெல்லாம் ஒரு தனி தைரியம் வேணும், ” இவ்வாறு விதவிதமாக கிண்டலடித்து வருகின்றனர். முதல் டெஸ்டின்போது தடை செய்யப்பட்ட கருப்பு நிற சாக்ஸை அணிந்து, கில் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.