Sunday, April 6, 2025

இவன் இன்னும் ‘திருந்தல’ மாமா  ‘BCCI’ கண்டித்தும் பலனில்லை

ஏப்ரல் 1ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள், உத்தர பிரதேசத்தின் Ekana மைதானத்தில் மோதின. இதில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாயசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின்போது பஞ்சாப் வீரர் பிரியன்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்திய, லக்னோ பவுலர் திக்வேஷ் ரதி Notebook கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் கடுப்பான BCCI, திக்வேஷ் ரதிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்தது. அதோடு அவருக்கு 1 Demerit புள்ளியும் வழங்கப்பட்டது. ஒரு வீரர் 4 முதல் 7 வரையிலான Demerit புள்ளிகளை பெற்றால், 1 போட்டியில் அவரால் ஆட முடியாது.

இந்தநிலையில் ஏப்ரல் 4ம் தேதி மீண்டும், உத்தர பிரதேசத்தின் Ekana மைதானத்தில் லக்னோ-மும்பை அணிகள் மோதின. இதில் மும்பையை வீழ்த்தி லக்னோ பார்முக்குத் திரும்பியுள்ளது. இந்தநிலையில் திக்வேஷ் ரதி மீண்டும் Notebook செலிப்ரேஷனில் ஈடுபட்டு, சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.

மும்பை வீரர் நமன் தீர் 46 ரன்னில் இருந்தபோது, திக்வேஷ் பந்தில் ஆட்டமிழந்தார். அதைக் கொண்டாடுகிறேன் என்ற பெயரில், திக்வேஷ் மீண்டும் Notebookஐ கையில் எடுத்துள்ளார். BCCI சொல்லியும் கூட அவர் தன்னுடைய பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

இதைப்பார்த்த ரசிகர்கள், ” இவன் இன்னும் திருந்தல மாமா” என்று, சமூக வலைதளங்களில் திக்வேஷைக் கிண்டலடித்து வருகின்றனர்.

Latest news