Tuesday, February 10, 2026

உங்கள் போனில் பேட்டரி சீக்கிரம் குறையுதா? இந்த TIPS உங்களுக்குத்தான்

ஸ்மார்ட்ஃபோன்கள் நம் வாழ்வின் மிக முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகின்றன. பல மணி நேரங்கள் அவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் மொபைல் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது. 

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை அதிகரிக்கவும், ஒருநாள் முழுவதும் நீடிக்கவும் உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள டிப்ஸ் பற்றி இதில் பார்ப்போம்.

திரையின் வெளிச்சம் அதிகமாக இருப்பது பேட்டரி அதிகம் செலவாகும் காரணம். திரையின் பிரைட்னெஸ் குறைக்கவும், Auto-Brightness அம்சத்தை பயன்படுத்தவும்.

திரை அணையாமல் நீண்ட நேரம் இருக்க வேண்டாம். 30 வினாடிகள் அல்லது 1 நிமிடம் என குறைக்கவும்.

Always-On Display போன்ற அம்சங்களை தேவையில்லாமல் அணைத்து வையுங்கள். AMOLED/OLED திரை இருந்தால், Dark Mode-ஐ பயன்படுத்துவது நல்லது. இது மின்சாரம் சேமிக்கும்.

Wi-Fi, Bluetooth, NFC, Location Services ஆகியவை பயன்படுத்தாதபோது அனைத்தையும் அணைத்து வையுங்கள்.

Settings > Battery பகுதியில் சென்று அதிக பேட்டரி பயன்படுத்தும் செயலிகளை கண்டறிந்து, அவற்றின் Background Activity மற்றும் Push Notifications-ஐ முடக்கவும்.

அசல் சார்ஜர் அல்லது நம்பகமான பிராண்ட் சார்ஜரை மட்டும் பயன்படுத்தவும். சார்ஜ் செய்யும்போது போன் சூடானால், கேஸை கழற்றி வையுங்கள்.

பேட்டரியை 0% ஆக குறைய விடாதீர்கள்; 20%-80% இடைப்பட்ட நிலையில் வைத்திருப்பது நல்லது.

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் போன் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க முடியும்

Related News

Latest News