தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என வரிசையாக விழாக்கள் வருவதால், அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என ஜனவரி 15 முதல் 18 வரை தொடர்ந்து 4 நாட்கள் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளும் இயங்காது.
நாளை (புதன்கிழமை) ஒரு நாள் மட்டுமே வங்கிகள் இயங்கும் என்பதால், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை நாளைக்குள்ளேயே முடிக்கத் தயாராகி வருகின்றனர்.
தொடர் விடுமுறையால் காசோலை பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வணிகப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படலாம்.
பண்டிகை காலத்தில் ரொக்கப் பணத்தின் தேவை அதிகமாக இருக்கும். ஏ.டி.எம் மையங்களில் முழு அளவில் பணத்தை இருப்பு வைக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
