திவாலான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் அனில் அம்பானி, 12 ஆண்டுகளுக்கு முன்பு பல வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தவில்லை. அதனால் அவரது கடன் கணக்கை மோசடியானது என்று state bank of india, bank of india ஆகியவை ஏற்கனவே அறிவித்திருந்தன.
இந்த நிலையில், அனில் அம்பானி மோசடியாளர் என்று பேங்க் ஆப் பரோடாவும் அறிவித்துள்ளது. 2 தவணைகளாக 2 ஆயிரத்து 462 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கியதாகவும், அதனை ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டியுள்ளது.