சமீபத்தில் வங்கிகள் மற்றும் நுகர்வோரை எச்சரிக்கும் விதமாக, WhatsApp மூலம் வங்கி அப்ளிகேஷன் அப்டேட் லிங்க் அனுப்பும் புதிய மோசடிஅதிகரித்து வருகிறது. இந்த scam எப்படி நடக்கிறது என்று பார்க்கலாம். மக்கள் வாட்ஸ்அப்பில் போலியான எண்ணிலிருந்து ஒரு மெசேஜ் பெறுகின்றனர். அதில் ‘உங்கள் வங்கி அப்ளிகேஷனை உடனே அப்டேட் செய்யுங்கள்’ அல்லது ‘உங்கள் கணக்கு பாதுகாப்புக்கு புதிய அப்டேட் தேவைப்படுகிறது’ போன்ற செய்திகள் வரும்.
அத்துடன், அந்த மெசேஜில் ஒரு போலி லிங்க் இணைக்கப்பட்டுள்ளது. பயனர் அந்த லிங்கை கிளிக் செய்யும் போது, உண்மையான வங்கி போல உருவாக்கப்பட்ட ஒரு வலைப்பக்கம் திறக்கப்படுகின்றது. இதில் பயனர் தனது தகவல்கள், கடவுச்சொற்கள், OTP மற்றும் நிதி தகவல்களை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இது நேரடியாக போலி வங்கி தளத்திற்கு சென்றுவிடும்.
இந்த scam நமது பண வரவுகளை பாதிக்கக்கூடும். சில நேரங்களில், bank app இல் இருக்க வேண்டிய பாதுகாப்பு குறியீடுகள் போல் தோன்றும் pop-ups மூலம், பயனர்கள் தவறுதலாக தகவல் வழங்கலாம். இதனால், நமது கணக்கில் இருந்து பணம் பறிபோகும் அபாயம் அதிகம்.
இதனை எச்சரிக்கையாக இருந்து தவிர்க்கலாம். வங்கி சார்ந்த எந்தப் பிரச்சினையும் தனித்தனியாக வங்கி அப்ளிகேஷனில் உள்ள அதிகாரப்பூர்வ அப்டேட் மூலம் மட்டும் செய்யவும். WhatsApp, SMS அல்லது email மூலம் வரும் அறிமுகமில்லாத link களை கிளிக் செய்யாதீர்கள். உங்கள் வங்கி app அல்லது இணையதளத்தில் இருந்து நேரடியாக log in செய்து செய்திகளை சரிபார்க்கவும்.
சந்தேகத்துக்கிடமான link களை report செய்யவும். தேவைப்பட்டால் வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளவும். மொத்தத்தில், இந்த scam நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நமது நிதியை திருட முயற்சிக்கிறது. முன் எச்சரிக்கை, கவனம் மற்றும் அதிகாரப்பூர்வ வழிமுறைகளை பின்பற்றுவது மட்டுமே பாதுகாப்புக்கான ஒரே வழி.