மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள புத்வாரா பகுதியில் நேஹா என்ற 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் வசித்து வந்தார். அவரது நடத்தையில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் நேஹா வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடைய பெயர் அப்துல் கலாம் என்பதும் தெரியவந்தது. இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த அவர், மஹாராஷ்டிராவின் மும்பையில் 20 ஆண்டுகள் வசித்ததும், அதன்பின் மத்திய பிரதேசத்தின் போபாலுக்கு குடிபெயர்ந்ததும் தெரியவந்தது.
தன்னை திருநங்கை என்று கூறி ஆதார், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக பெற்றிருப்பதும், போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வங்கதேசத்திற்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது. எனவே, அவர் இந்தியாவில் உளவு பார்த்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.