மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச மாடல் அழகியை போலீசார் கைது செய்தனர்.
சாந்தா பால் என்ற அந்த பெண் தமிழிலும், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கைது செய்யும்போது அவரிடம் பல போலி ஆவணங்கள் மீட்கப்பட்டன. இதில் இரண்டு ஆதார் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வங்கதேச பாஸ்போர்ட்கள் உள்ளிட்டவை இருந்துள்ளது.
இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாந்தா பாலுக்கு 8-ம் தேதி வரை காவல் வழங்கப்பட்டது.