வங்காளதேசத்தில் விமானப்படை பயிற்சி விமானத்தின் பயிற்சி விமானம் ஒன்று டாக்காவில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில்16 பேர் உயிரிழந்துள்ளனர். 70 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான விமானம் F-7 BGI விமானம் விமானப்படைக்குச் சொந்தமானது என்பதை பங்களாதேஷ் உறுதிப்படுத்தியது.
விபத்துக்கான காரணத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்த விபத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர்,முகமது யூனுஸ் கூறியுள்ளார்.