ஜம்மு காஷ்மீரில் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களை பென் டிரைவ், வாட்ஸ்அப் அல்லது பிற சமூக ஊடக தளங்களில் பகிரக்கூடாது. அதற்கு பதிலாக கிளவுட் அடிப்படையிலான GovDrive தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல்களைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஜம்மு காஷ்மீரில் மின் துறை தொடர்பான பல அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு ஆளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.