Friday, August 15, 2025
HTML tutorial

பக்ரீத் பண்டிகை : தவெக தலைவர் விஜய் வாழ்த்து

உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் : உன்னத தியாகத்தை போற்றும் வகையில், பக்ரீத் பண்டியை கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உயரிய தியாகத்தை போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதி ஏற்போம்’ என தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News