சாப்பிடும் நேரத்தில் டி.வி. அல்லது ஸ்மார்ட்போன் பார்ப்பது தற்போது பலரின் அன்றாட பழக்கமாக மாறியிருக்கிறது. சாப்பிடும் போது இதுபோன்ற காட்சி சாதனங்களை பார்த்துக் கொண்டால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். குறிப்பாக உடல் பருமன், செரிமான பிரச்சனைகள் போன்ற வலுவான அபாயங்கள் ஏற்படும்.
டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது வழக்கத்தை விட கூடுதலாக உணவு உண்ண நேரிடும். இதனால் சாப்பிட்ட உணவு எளிதாக ஜீரணமாகாது.
Also Read : இரவில் செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்?
சாப்பிடும்போது டி.வி., செல்போன் பார்க்கும் பழக்கத்தால் தங்கள் பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள நேரம் இருக்காது. சாப்பிட்ட பிறகும் அந்த பழக்கத்தை தொடரும்போது அவர்கள் தனி உலகத்தில் இருப்பது போன்ற நிலை ஏற்பட்டுவிடும்.
சில நேரங்களில் ஸ்மார்ட்போனில் அதிகமாக கவனத்தை வைப்பதால், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை. இது உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே முடிந்தவரை சாப்பிடும் போது டி.வி., போன் பார்க்காமல் இருப்பதை தவிர்க்கவும்.