மீன்பிடி வலையில் சிக்கிய “குட்டி டால்பின்“

439
Advertisement

டால்பின்கள்- அவற்றின் நேர்த்தி, புத்திசாலித்தனம், விளையாட்டுத்தனமான இயல்பு மற்றும் மனிதர்களுடனான நட்பு ஆகியவற்றால் நன்கு  அறியப்பட்டவை. இந்த பந்தத்தைத் தங்கள் கருணையுடனும், தூய்மையான இதயத்துடனும் தொடர்பவர்களும் உண்டு.

மீன்பிடி வலையில் சிக்கிய  டால்பின் குட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோ பழையதாக இருந்தாலும் மீண்டும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இணையத்தில் பகிரபட்ட இந்த வீடியோவில் , மீனவர் ஒருவர் கடலில் நடு கடலில் மீன்  பிடிக்க வலையை வீசுகிறார்.வலையில் மீன் மாட்டும் என எதிர்பார்த்து காத்திருந்தநேரத்தில் வலையில் ஏதோ மீன் ஒன்று சிக்கியது .அதை வெளியில் எடுத்து பார்த்த பொது தான் ஆச்சிரியம் காத்திருந்தது.

அந்த  வலையில் சிக்கிருந்தது ” டால்பின் குட்டி” ,அதை அறிந்த அந்த நபர் வலையை வெளியில் எடுத்து, டால்பின் குட்டியை சுற்றிருந்த வலையை அகற்றுகிறார்.அதை முதலில் கையில் எடுத்தபோது துள்ளிக்கொண்டு இருந்த டால்பின் குட்டி , வலையை அகற்றியதும் அமைதியடைந்து விடுகிறது.

பின் , தன் கையில் அமைதியாக இருந்த டால்பின் குட்டிக்கு ஒரு முத்தம்மிட்டு மீண்டும் அதை கடலில் விட்டுவிடுகிறார் அந்த நபர். வலையில்  இருந்து மீண்ட மகிழ்ச்சில் துள்ளிக்கொண்டு மீண்டும் குடும்பத்துடன் இணைய அங்கிருந்து விடைபெற்றது.

கையில் கிடைத்த டால்பின் குட்டியை மீண்டும் கடலில் விட்ட அந்த நபருக்கு இணையத்தில் பாராட்டுக்கள்  குவிந்துவருகிறது.