Friday, January 24, 2025

இந்தியாவுக்குள் நுழைந்த HMPV : 8 மாத குழந்தைக்கு தொற்று உறுதி

2019ம் ஆண்டில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது HMPV என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் முதல் HMPV வைரஸ் தொற்று பாதிப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை கண்காணிப்பில் உள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Latest news