Thursday, December 11, 2025

காசாவில் பிறந்த குழந்தைக்கு ‘Singapore’ எனப் பெயர்., நெகிழ வைக்கும் காரணம்

காசாவில் போருக்கு நடுவே பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ எனப் பெயர் வைத்துள்ளனர் பாலஸ்தீனிய தம்பதி. கடந்த அக்டோபர் 16ம் தேதி பிறந்த அந்தப் பெண் குழந்தைதான் நாட்டிலேயே இந்தப் பெயர் சூட்டப்படும் முதல் குழந்தை.

அவரின் தந்தை, ஹம்தான் ஹதாத், லவ் எய்ட் சிங்கப்பூர் (Love Aid Singapore) என்ற அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு சூப் கிச்சனில் சமையல்காரராகப் பணிபுரிகிறார். இந்த அறக்கட்டளை இரண்டு ஆண்டுகளாக வடக்கு மற்றும் தெற்கு காசாவில் சமைத்த உணவுகளை வழங்கி வருகிறது.

கர்ப்ப காலத்தில் ஹம்தாத்தின் மனைவி அறக்கட்டளையின் சமையலறை உணவையே முழுமையாக நம்பியிருந்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தால் காசா முழுவதும், பஞ்சம் தலைவிரித்தாடிய போது, அவருக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது மகளுக்கு சிங்கப்பூர் எனப் பெயரிட்டுள்ளனர்.

Related News

Latest News