எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘பாகுபலி’. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பாகுபலி 2 வெளியாகி அதுவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக “பாகுபலி தி எபிக்” என்ற பெயரில் வருகிற அக்டோபர் மாதம் 31ந் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், பாகுபலி தி எபிக் படம் அமெரிக்காவில் டிக்கெட் முன்பதிவில் மட்டும் 1 லட்சம் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
