நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அக்சர் படேல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்சர் படேல் இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, சுமார் 131 ஸ்ட்ரைக் ரேட்டில் 1653 ரன்கள் எடுத்துள்ளார். அக்சர் பந்துவீச்சிலும் சிறந்து விளங்கி, 7.28 என்ற எகானமியில் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.