மயிலாடுதுறை நகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியை அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்த்து மாசில்லா உலகம் படைப்போம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து, தூய்மையான காற்றை சுவாசிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.