2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஆடு ஜீவிதம் படத்திற்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளாது. பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான “எம்புரான்” படத்தில் குஜராத் கலவரத்தை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றது. இதன் காரணமாக அவருக்கு விருது மறுக்கப்பட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.