Friday, December 27, 2024

இனி சோகமா இருக்கும் போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

கவலை, சோகம் போன்ற உணர்வுகள் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க கால அளவிற்கு நீடிப்பது தான் மன அழுத்தம்.

மன நிலை ரீதியான பல பாதிப்புகள் மற்றும் தாக்கங்கள் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணியாக இருந்தாலும் நாம் வாழும் சூழல், பின்பற்றும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை முதற்கொண்டு மன அழுத்தம் அதிகரிக்கவோ குறையவோ காரணமாக அமைகிறது.

வெள்ளை சக்கரை, பொறித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவு பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை உண்ணும் போது மன அழுத்தம் தீவிரமாவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அதிகமாக காபி பருகுவது, புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவை உடல்நிலைக்கு மட்டுமில்லாமல் ஆரோக்கியமான மன நிலைக்கும் கேடு விளைவிப்பதாக கூறும் மருத்துவர்கள், சில நேரங்களில் விட்டமின் மற்றும் தாது சத்துக்கள் குறைவாக இருந்தாலும் மன அழுத்தத்தை மேற்கொள்வது சவாலாக மாறும் என்பதால், மன அழுத்தத்தில் இருப்பவர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வதை வழக்கமாக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

Latest news