பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் தாக்கப்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் சைப் அலிகானிடம் ரூ.1 கோடி கேட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில், ஒரு ஆட்டோ டிரைவர் சைஃப் அலிகானை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார். சரியான நேரத்தில் சயிப்பை பாதுகாப்பாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சைஃப்பின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் என்பவருக்கு மும்பையில் உள்ள ஒரு நிறுவனம் அவருக்கு 11 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்தது.